26.05.15- அன்று காரைதீவு கமு/ கமு/சண்முக மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு வித்தியாலய மாணவி வித்தியாவிற்கு அஞ்சலி நிகழ்வும்: கவனயீர்ப்பு போராட்டமும்.
புங்குடுதீவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வும், அக் கொடூரக் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும் காரைதீவு கமு/ கமு/சண்முக மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பாடசாலை வளாகத்தில் இன்று(26-05-2015) காலையில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தீபங்கள் ஏற்றப்பட்டு அம் மாணவிக்கான ஆத்மா சாந்தி நிகழ்வும் நடைபெற்றது.
இதன் போது மாணவர்கள் பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கிய வண்ணம் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தது மனதை நெகிழ வைத்துவிட்டது.
No comments:
Post a Comment