என் வாழ்வில் என்னை அதிகம் உலுக்கிய போிடி
சுனாமி ஆழிப்பேரலை !
எத்தனையோ நவீனங்கள் வத்திட்டபோதிலும் இந்தோனேஷியாவிலும் சுமத்ராவிலும் இந்தியாவிலும் இலங்கையிலுமென 200,000 மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக கடற்கரை வெளியெங்கும் கூக்குரலும் கதறலுமாக எம்மக்கள் பிணங்களைத் தேடி அலைந்து திரியும்படி தடம்பதித்த அந்தநாள் எம்மைக் கடந்து பத்தாண்டுகளாகின்றது -கடற்கரையை அண்டி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் முழுமையாக வழங்கப்படவில்லை எனும் குறைபாடும் காணப்படுகின்றது.
நெஞ்சில் நிழலாடும் அந்தநாளை இன்று நினைத்தாலும் நெஞ்சம் படபடக்கிறது. இயற்கையின் சீற்றத்திற்கு யாராலும் எதனைக் கொடுத்தாலும் ஈடாகாது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் எழுச்சிக்கு அரசு உதவவேண்டும். ஒரு காலகட்டத்தில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் வீடுகள் அமைக்கப்படக்கூடாது என்பதற்கான வரையறைகள் மக்களுக்கு வழங்கப்பட்டபோதிலும் உல்லாச விடுதிகளுக்கான கட்டிடங்கள், மீனவர்களுக்கான வாடிகள் போன்றன கடற்கரையோரங்களில் கட்டப்பட்டுள்ளன.
இது 60மீற்றர்களுக்கும் அப்பால் இருக்கவேண்டுமெனக் கூறப்பட்டபோதிலும் அதற்கும் குறைவாக கட்டப்படுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். சுனாமி பேரலை காரணமாக தங்களுடைய வாழ்வினை மேம்படுத்தும் எத்தனையோ திட்டங்கள் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் போன உயிர் மீண்டும் திரும்பப் போவதில்லை.
எனவே, பத்தாண்டுகள் கடந்துவிட்ட ஆழிப்பேரலையின் பாதிப்புக்களிலிருந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுவதுடன், அந்த நிகழ்வில் உயிர்நீத்த அத்தனை ஆத்மாக்களையும் இன்றைய நாளில் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்
No comments:
Post a Comment